Translate to Tamil (எங்கே – sentences)
- Where are we?
- Where is your father?
- Where is Batticaloa?
- Where is your school?
- Where is your room?
- Where did you go?
- Where are you going?
- From where are the Sri Lankans coming?
- Where will we meet?
- Where is my child playing?
- Where are the birds flying?
- Where can I buy a ticket?
- Where is the nearest bank?
- Where did you see the woman?
- Where did she go last Sunday?
- Where did you live last year?
- Where will you eat today?
- Where would you like to go
- Your shoes are here. Where are mine?
- Where did you find that ugly cat?
Review your answers:
- நாங்கள் எங்கு இருக்கிறோம்?
- உங்கள் தந்தை எங்கே?
- மட்டக்களப்பு (Batticaloa) எங்கே?
- உங்கள் பாடசாலை எங்கே?
- உங்கள் அறை (room) எங்கே?
- நீ எங்கே போனாய்?
- நீ எங்கே போகிறாய்?
- இலங்கையர்கள் எங்கே இருந்து வருகிறார்கள்?
- நாம் எங்கே சந்திப்போம்?
- எனது குழந்தை எங்கே விளையாடுகிறது?
- பறவைகள் எங்கே பறக்கின்றன?
- எங்கே ஒரு டிக்கெட் வாங்கலாம்?
- அருகிலுள்ள வங்கி (bank) எங்கே?
- அந்தப் பெண்ணை நீங்கள் எங்கே பார்த்தீர்கள்?
- கடந்த / போன ஞாயிறன்று அவள் எங்கே போனாள்?
- கடந்த /போன ஆண்டு நீங்கள் எங்கே வாழ்ந்தீர்கள?
- இன்று நீங்கள் எங்கே சாப்பிடுவீர்கள்?
- நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள்
- உங்கள் சப்பாத்துக்கள் (shoes) இங்கே இருக்கிறது. எனது (சப்பாத்துக்கள்) எங்கே?
- அந்த அசிங்கமான பூனையை நீங்கள் எங்கே கண்டுபிடித்தீர்கள்?