Lesson 26: Defective Verbs

1. Learn about defective verbs

2. Learn some of the commonly used defective verbs:

Positive / NegativeTranslationExamples
1வேண்டும் / வேண்டாம் be necessary, be needed or required, be wanted or deservedஎங்களுக்கு பழங்கள் வேண்டும்.
We want fruits.
2முடியும் / முடியாது be able to; have the ability to; canஅவள் உணவு வாங்க முடியும்.
She can buy food.
3கூடாதுa prohibitive; a form of disapproval.நீங்கள் குடிக்க கூடாது.
You should not drink.
4தெரியும் / தெரியாது knowஅவருக்குப் பல மொழிகள் தெரியும்.
He / she knows several languages.
5பிடிக்கும் / பிடிக்காது like; be agreeable to
எனக்கு பழங்கள் பிடிக்காது.
I don’t like fruits.
6போதும் / போதாதுbe adequate or enough; be sufficient
“சோறு போதும்,” என்றார்.
“Enough rice,” he / she said.
7கிடைக்கும் / கிடைக்காது get; obtain; produce; yield/be foundஇந்த மரத்தில் தேங்காய் (coconut) கிடைக்கும்.
This tree yields coconuts.

15 ரூபாய்க்கு ஒரு பழம் கிடைக்காது.
One cannot get a fruit for fifteen rupees.
8விளங்கும் /விளங்காதுbe clear; be understood; make senseஅவருக்கு தமிழ் விளங்கும்.
He / she understands Tamil.
9புரியும் / புரியாது  be clear; be understood; make senseநான் சொல்வது அவனுக்குப் புரியாது.
He does not understand what I am saying.
10பசி / பசிக்கிறது / பசிக்காதுbe hungryஎனக்கு பசிக்கிறது.
I am hungry.
11இருக்கிறது / இருக்காதுhaveஅவருக்கு ஒரு வீடு இருக்கிறது.
He / she has a house.
12
உண்டு / இல்லை
be (present in a place or in something) or haveஉலகத்தில் நல்லவர்களும் உண்டு, கெட்டவர்களும் உண்டு.
There are good people in this world, there are bad people too.

3. Translate from Tamil to English:
a) அவனுக்கு ஒன்றும் வேண்டாம்.
b) அவளுக்கு தமிழில் எழுத முடியுமா?
c) இலைஜா அப்படிக் குடிக்கக் கூடாது.
d) சிந்தியாவுக்கு நிறைய யாழ்ப்பாண சமையல் குறிப்புக்கள் (recipes) தெரியும்.
e) அவளது உணவு உனக்குப் பிடிக்காது என்றால், பின்னர் (then) எதற்கு அதை சாப்பிடுகிறாய்?

4. Check your answers:
a) He doesn’t want anything.
b) Can she write in Tamil?
c) Elijah should not drink like that!
d) Cynthia knows a lot of Jaffna recipes.
e) If you don’t like her food, then why are you eating it?

5. Translate from English to Tamil:
a) That water is enough for a village.
b) Because of the import ban (இறக்குமதித் தடை) there wont be enough food.
c) I understand the Tamil teacher’s speech (பேச்சு/கதை), but not the Tamil movie (திரைப்படம்).
d) Aparna doesn’t have a dog in London.
e) Shruthi and Indi have two children.

6. Check your answers:
a) அந்த ​நீர்/தண்ணீர் ஒரு கிராமத்திற்குப் போதும்​.​
b) இறக்குமதித் தடையால் போதுமான உணவு கிடைக்காது.
c) எனக்கு தமிழ் ஆசிரியரின் பேச்சு/கதை விளங்கும் ஆனால் தமிழ்த் திரைப்படம் விளங்காது.
d) அபர்ணாவிடம் லண்டனில் நாய் இல்லை.
e) ஷ்ருதிக்கும் இன்டிக்கும் இரண்டு குழந்தைகள் உண்டு.

7. Listen to the audio clip below:

8: Review the Tamil text:

இலைஜா: உனக்கு ஆட்டிறைச்சிக் கறி வேண்டுமா?

அமிதா: என்னால் இறைச்சி (meat) சாப்பிட முடியாது.

இலைஜா: ஏன்?

அமிதா: எனது மதத்தில், மிருகங்களைக் கொல்லக் (to kill) கூடாது.

இலைஜா: உனக்கு மரக்கறி சாப்பிடப் பிடிக்குமா?

அமிதா: ஆம். மரக்கறி சுகாதாரத்திற்கு (health) நல்லது என்றும் தெரியும்.

இலைஜா: உன் தோட்டத்தில் நிறைய மரக்கறி கிடைக்குமா?

அமிதா: எனது தோட்டத்தில் முள்ளங்கி (radish), உருளைக் கிழங்கு (potato), மற்றும் கத்தரிக்காய் (egg plant) இருக்கிறது. தோட்டத்தில் வெங்காயமும் (onion) உண்டு. ஆனால் ஒரு நாளும் மரக்கறி போதுமாக இருக்கிறதில்லை.

இலைஜா: எனக்கு மரக்கறி சாப்பிடுவதன் நன்மைகள் (good things/benefits) புரிகிறது. ஆனாலும் எனக்கு மரக்கறி சாப்பிடப் பிடிக்காது. என்னால் இறைச்சி சாப்பிடுவதை நிறுத்த முடியாது. எனக்குப் பசிக்கிறது. எனக்கு ஆட்டிறைச்சிக் கறி வேண்டும்.

அமிதா: எனக்கு இறைச்சி சாப்பிடுபவர்களைப் புரிய முடியாது.

9. Check your translations:

Elijah: Do you want mutton curry?

Amita: I cannot eat meat.

Elijah: Why?

Amita: In my religion, we cannot kill animals.

Elijah: Do you like eating vegetables?

Amita: Yes. (I) also know that vegetables are good for health.

Elijah: Does your garden give a lot of vegetables?

Amita: In my garden, there is radish, potato and egg plant. Garden also has onions. But the vegetables are never enough.

Elijah: I understand the benefits of eating vegetables. But I still don’t like eating vegetables. I cannot stop eating meat. I am hungry. I want mutton curry.

Amita: I cannot understand those who eat meat.

10. Now answer the questions below:
a) இலைஜாவுக்கு என்ன வேண்டும்?
b) ஏன் அமிதா இறைச்சி சாப்பிட முடியாது?
c) இலைஜாவுக்கு மரக்கறிகளை பிடிக்குமா?
d) ஏன் அமிதா மரக்கறிகளை சாப்பிட பிடிக்கும்?
e) அமிதாவின் தோட்டத்தில் என்ன மரக்கறிகள் உண்டு?

11. Practice using defectuve verbs by answering the questions below in full sentences:
a)உனக்கு எந்த உணவு சாப்பிட பிடிக்காது? (Which food do you not like to eat?)
b)உங்களுக்கு எந்த விளையாட்டை விளையாட முடியாது? (Which sport can’t you play?)
c) நீ எந்த செயலை செய்ய கூடாது? (What thing should you not do?)
d) உனக்கு தமிழ்ப் படங்களை பற்றி என்ன தெரியும்? (What do you know about Tamil films?)
e) உங்கள் குடும்பத்தைப் பற்றி உங்களுக்கு என்ன பிடிக்கும்? (What do you like about your family?)
f) இந்த உலகில் எந்த வளம் போதாது? (In this world, which resource is not enough?)
g) ஒரு தோட்டத்தில் என்ன பொருட்கள் கிடைக்கும்? (What things can you find in a garden?)

12. Learn New Vocabulary:
ஏதாவது – something / anything
தேர்வு – examination (in academic institutions); test OR choice/ selection
வரை – up to / until
சண்டை – fight
போடு (verb) – put / apply
மொழி – language
என்றால் – if (used as a conditional form)
பேசு (verb) – speak / talk
சோறு – cooked rice.
கல்லூரி – college
காலம் – period / time
நூறு – one hundred
கைக்கடிகாரம் – wristwatch
ஐம்பது – fifty
குறையாமல் – without diminishing / lowering
தேங்காய் – coconut
சொல்வது – that which is said
ஒன்றும் – nothing
உலகம் – world
நல்லவர் – he / she that is good
கெட்டவர் – he / she that is bad
சமையல் குறிப்புக்கள் – recipes
பின்னர் – then
குளம் – tank
நீர்/தண்ணீர் – water
போது -when
இறக்குமதி – import
தடை- ban
போதுமான (adjective) – enough
பேச்சு/கதை – speech
திரைப்படம் – movie
கறி – curry
மரக்கறி / காய்கறிகள் – vegetables
இறைச்சி – meat
மதம் – religion
சுகாதாரம் – health
முள்ளங்கி – radish
உருளைக்கிழங்கு – potato
கத்தரிக்காய் – egg plant
வெங்காயமும் – onion
போதுமாக (adverb) – enough
நன்மைகள் – good things / benefits
நிறுத்து (verb) -stop an activity
செயல் – act / deed / activity
விளையாட்டு – game/ sport
உலகம் – world
வளம் – resource

13. Review vocabulary flashcards

Go to Lesson 25Lesson MenuGo to Lesson 27