Translate to Tamil (என்ன – sentences)
- What‘s that?
- What time is it?
- What did he say?
- What‘s that sound?
- What’s that building?
- What‘s that big mountain?
- What did the doctor say?
- What are you looking at?
- What did you have to eat? to drink?
- What time will you go home?
- What did they do to the table?
- What‘s your daughter’s name?
- What do you have in your bag?
- What happened last night? What is happening?
- What did you buy at the shop? What did she buy at the shop?
- What did they say in America? What will they say to me?
- What‘s your name? What does it mean?
- What is Aparna doing? What is Aparna reading?
- What do you do? What are you going to do?
- What is Savan doing? What am I going to do now?
- What did Cynthia cook? What is Kesevan eating?
- What is on the table? What is in the house?
- What is the problem? What is the problem with you?
- What‘s the price of the bus ticket? What is the price of this car?
- What did you do last Sunday? What did you do this morning?
- What medicine did the doctor give you?
- She listens carefully to what I say.
- Can you write down what he says?
- What are you going to do today?
- What did she buy at that store?
- What kind of work will you do in India?
- What did the teacher say? What book will the students read?
- What happened to the ship? What happened to her?
- What did you do with my book? What did you do with the rice?
- What did you give him yesterday? What will you give him tomorrow?
Review your answers:
- அது என்ன?
- (இப்போது) நேரம் என்ன?
- அவன் என்ன சொன்னான்?
- அது என்ன சத்தம்?
- அது என்ன கட்டிடம் (building)?
- அந்த பெரிய மலை என்ன?
- மருத்துவர் என்ன சொன்னார்?
- நீ என்னத்தைப் (shortened to: எதை) பார்க்கிறாய்?
- நீ என்னத்தை சாப்பிட்டாய்? நீ என்னத்தைக் குடித்தாய்?
- எத்தனை மணிக்கு நீ வீட்டுக்குப் போவாய்?
- மேசைக்கு அவர்கள் என்ன செய்தார்கள்?
- உனது மகளின் பெயர் என்ன?
- உனது பையில் (bag) என்ன உள்ளது/இருக்கிறது?
- நேற்று இரவு என்ன நடந்தது (happened)? (இப்போது) என்ன நடக்கிறது?
- நீ கடையில் என்ன வாங்கினாய்? அவள் கடையில் என்ன வாங்கினாள்?
- அவர்கள் அமெரிக்காவில் என்ன சொன்னார்கள்? அவர்கள் எனக்கு என்ன சொல்வார்கள்?
- உங்கள் பெயர் என்ன? இதற்கு (இந்த பெயருக்கு) என்ன அர்த்தம்?
- அபர்ணா என்ன செய்கிறாள்? அபர்ணா என்ன வாசிக்கிறாள்?
- நீ என்ன செய்கிறாய்? நீ என்ன செய்யப் போகிறாய்?
- சவான் என்ன செய்கிறான்? நான் இப்போது என்ன செய்யப் போகிறேன்?
- சிந்தியா என்ன சமைத்தாள்? கேசவன் என்ன சாப்பிடுகிறான்?
- மேசையில் என்ன இருக்கிறது? வீட்டில் என்ன இருக்கிறது?
- என்ன பிரச்சனை? உனக்கு என்ன பிரச்சனை?
- பஸ் டிக்கெட்டின் விலை என்ன? இந்த காரின் விலை என்ன?
[‘you’ translated as நீங்கள் (respectful) from here] - கடந்த ஞாயிறு நீங்கள் என்ன செய்தீர்கள்? இன்று காலை நீங்கள் என்ன செய்தீர்கள்?
- மருத்துவர் உங்களுக்கு என்ன மருந்து தந்தார் (give)?
- நான் சொல்வதை அவள் கவனமாகக் கேட்கிறாள் (listen).
- அவர் சொல்வதை உங்களால் எழுத முடியுமா?
- இன்று நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
- அவள் அந்த கடையில் என்ன வாங்கினாள்?
- இந்தியாவில் நீங்கள் என்ன வகையான வேலை செய்வீர்கள்?
- ஆசிரியர் என்ன சொன்னார்? மாணவர்கள் என்ன புத்தகம் படிப்பார்கள்?
- கப்பலுக்கு என்ன நடந்தது? அவளுக்கு என்ன நடந்தது?
- என் புத்தகத்தை நீங்கள் என்ன செய்தீர்கள்? அரிசியை நீங்கள் என்ன செய்தீர்கள்?
- நேற்று நீங்கள் அவருக்கு என்ன கொடுத்தீர்கள்? நாளை அவனுக்கு என்ன கொடுப்பீர்கள்?