ஏன் – Why?

Translate to Tamil (ஏன் – sentences)

 1. Why did you go?
 2. Why are you crying?
 3. Why did he run away?
 4. Why would she do that?
 5. Why did this happen?
 6. Why would we go home?
 7. Why did you come early?
 8. Why did you buy a flower?
 9. Why did you get so angry?
 10. Why is he happy?
 11. Why did you open the box?
 12. Why are you angry with him?
 13. Why did he do such a thing?
 14. Why did she come home early?
  [You may be translated as நீங்கள் (respectful) after this point]
 15. Why did you buy the flowers?
 16. Why did you have dinner with her?
 17. Why are you saying that?
 18. Why do you want to be a doctor?
 19. Why didn’t you come to class yesterday?
 20. Why won’t my dog eat this rice?
 21. Why are you studying Tamil?
 22. Why is she dancing with that man?
 23. Why do you want to leave today?
 24. Why didn’t you read my essay?
 25. Why are people staring at me?
 26. Why do you love her?
 27. Why are you still here?
 28. Why do you spend so much time watching TV?

Review your answers:

 1. நீ ஏன் போனாய்?
 2. நீ ஏன் அழுகிறாய்?
 3. அவன் ஏன் ஓடினான்?
 4. அவள் ஏன் அதைச் செய்தாள்?
 5. இது ஏன் நடந்தது?
 6. நாம் ஏன் வீட்டிற்குச் செல்வோம்/ (more accurately செல்ல வேண்டும் for have to go)?
 7. நீ ஏன் சீக்கிரம் (early) வந்தாய்?
 8. நீ ஏன் பூ ஒன்றை வாங்கினாய்?
 9. நீ ஏன் இவ்வளவு கோபமடைந்தாய் (கோபம் (anger) + அடை(get))?
 10. அவன் ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறான்?
 11. நீ ஏன் பெட்டியைத் திறந்தாய்?
 12. நீ ஏன் அவனோடு கோவமாக இருக்கிறாய்?
 13. அவன் ஏன் அப்படி ஒரு காரியத்தைச் (an act) செய்தான்?
 14. அவள் ஏன் சீக்கிரம் வீட்டிற்கு வந்தாள்?
  [You may be translated as நீங்கள் (respectful) after this point]
 15. நீங்கள் ஏன் பூக்கள் வாங்கினீர்கள்?
 16. நீங்கள் ஏன் அவளுடன் இரவு உணவு சாப்பிடீர்கள்?
 17. நீங்கள் ஏன் அதைச் சொல்கிறீர்கள்?
 18. நீங்கள் ஏன் ஒரு மருத்துவராக இருக்க விரும்புகிறீர்கள்?
 19. நேற்று நீங்கள் ஏன் வகுப்புக்கு வரவில்லை?
 20. என் நாய் ஏன் இந்த சோற்றை சாப்பிடாது?
 21. நீங்கள் ஏன் தமிழ் படிக்கிறீர்கள்?
 22. அவள் ஏன் அந்த மனிதனுடன் நடனமாடுகிறாள்?
 23. இன்று நீங்கள் ஏன் வெளியேற விரும்புகிறீர்கள்?
 24. என் கட்டுரையை நீங்கள் ஏன் படிக்கவில்லை?
 25. மக்கள் ஏன் என்னை பார்க்கிறார்கள்?
 26. நீ ஏன் அவளை நேசிக்கிறாய்?
 27. நீங்கள் ஏன் இன்னும் இங்கே இருக்கிறீர்கள்?
 28. நீங்கள் ஏன் டிவி பார்க்க மிக அதிக நேரம் செலவிடுகிறீர்கள் (spend – செலவிடு) ?